4வது தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று
#Covid Vaccine
Prasu
3 years ago

துபாயை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றிருந்தபோது அந்தந்த நாடுகளில் 4 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி மத்திய பிரதேசம் வந்த அவர் மீண்டும் துபாய் செல்வதற்காக இன்று இந்தூர் விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கே எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி ஆனது. இதையடுத்து அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை 4 முறை அவர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.



