பால் மா விலையை குறைக்க முடியும்: இறக்குமதியாளர்கள் சங்கம்

Mayoorikka
3 years ago
பால் மா விலையை குறைக்க முடியும்: இறக்குமதியாளர்கள் சங்கம்

உலக சந்தையில் பால்மாவின் விலை குறையும் பட்சத்தில் நுகர்வோருக்கு நன்மைகளை வழங்க தயாராக இருப்பதாகவும், பால்மா விலையை குறைக்க முடியும் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் சர்வதேச ஏலத்திற்கு ஏற்ப பால்மாவின் விலை தீர்மானிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த எட்டு வாரங்களாக ஏலத்தில் பால்மா விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய விலையில் பால்மாவை முன்பதிவு செய்யாவிட்டால் இறக்குமதியாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

தற்போதைய விலையை அதிக காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறோம் என்றார்.

இருப்பினும் நிறுவனங்கள் விரும்பினால் குறைந்த விலையில் பால்மாவை விற்பனை செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!