தன்மீது அசிட் வீசிய காதலனையே கரம் பிடித்த காதலி

தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனை பெண் ஒருவர் திருமணம் செய்துள்ள விநோத சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.
துருக்கியின் இஸ்கெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசிம் ஒசன் செடிக். இவர் பெர்பின் ஒசிக் என்ற பெண்ணை நீண்ட காதலித்து வந்துள்ளார்.
எனினும் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் எனக்கு நீ கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க கூடாது எனக் கூறி தனது காதலி பெர்பின் மீது ஹசிம் அசிட்டினை வீசியுள்ளாயுள்ளார்.
இதனால் அப் பெண்ணின் முகம் மற்றும் உடலின் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து அந்நபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அவர் சிறையில் இருக்கும்போதும் தொடர்சியாக பெர்பின்சிடம் தன்னை மன்னித்து விடுமாறு கடிதம் எழுதி வந்துள்ளதாகவும் இதனால் நாளடைவில் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த தனது முன்னாள் காதலன் ஹசிமை பெர்பின் திருமணம் செய்துகொண்டார்.
இது குறித்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



