கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வு
Prabha Praneetha
3 years ago
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து கச்சா எண்ணெயை ஆறு மாத கடனுதவி அடிப்படையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, முதல் கச்சா எண்ணெய் கப்பல் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி நாட்டிற்கு வர உள்ளது.
எவ்வாறாயினும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் மூட வேண்டிய நிலை ஏற்படும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னர் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்படும்.