இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

#SriLanka
Nila
3 years ago
இலங்கையில் எரிபொருள்  விலையை  அதிகரிக்குமாறு  கோரிக்கை!

இலங்கையில் எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கடிதம் மூலம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலரை பயன்படுத்தினால், அந்நிய செலாவணி இல்லாமல் பெரும் நெருக்கடியை நாடு சந்திக்க நேரிடும் என நிதி அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலை 35 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலை 24 ரூபாவாலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 11 ரூபாவாலும் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் தேவையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய வங்கி ஆளுநரின் இந்தக் கடிதத்திற்கு நிதி அமைச்சு இதுவரை எவ்வித  பதிலையும் வழங்கவில்லை என தெரியவருகின்றது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!