மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை
Prabha Praneetha
3 years ago

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று – முதலியார் வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிபதியின் வீட்டிற்குள் நுழைந்த நபர் நீதவானின் துணைவியாரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பறித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனை தடுக்க முற்பட்ட நீதிபதியை அந்நபர் தாக்கியதுடன், தாக்குதலில் நீதவானின் கை மற்றும் கால்களில் சிறு காயமேற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீட்டிற்கு அருகிலிருந்த தென்னை மரம் மீதேறி வீட்டின் இரண்டாம் மாடிக்குள் சந்தேகநபர் உட்புகுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.



