இலங்கை சீனா, யப்பான் மற்றும் ரஷ்யாவிடமிருந்து கடன் வாங்க திட்டம்.
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கையானது சீனா, யப்பான் மற்றும் ரஷ்யாவிடமிருந்து நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயம் வெற்றியடைந்துள்ளதாகவும், சுமார் 140 கோடி அமெரிக்க டொலர்களை நிவாரணம் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை,சர்வதேச நாணயநிதியத்திடனிருந்தும் சலுகை அடிப்படையில் கடன் கடுமையான நிபந்தனைகளுக்குட்படாமல் பெறவும் ஆலோசனை நடத்தி வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது



