சதொச விற்பனை நிலையங்களை விரிவாக்க அரசாங்கம் தீர்மானம் 

Prathees
4 years ago
சதொச விற்பனை நிலையங்களை விரிவாக்க அரசாங்கம் தீர்மானம் 

ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் மையப்படுத்தி லங்கா சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

சந்தையில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற இறக்கத்தைத் தடுக்க சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தையை விரிவுபடுத்துவதும், தரமான இறக்குமதி மற்றும் உள்ளூர் பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பை 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கும் வகையில் 1000 ஆக விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!