மஹியங்கனை பாலத்தில் இருந்து குதித்த காதல் ஜோடி

மஹியங்கனை பாலத்தில் இருந்து இளைஞனும் யுவதியும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.
ஆற்றில் குதித்த இளைஞன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் யுவதி காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாலத்தின் தூண் அருகில் நின்று யுவதி ஒருவர் ஆற்றில் குதித்ததாகவும் இதன் பின்னர் இளைஞன் குதித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் சிறுமியை காப்பாற்ற குதித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த அந்த நபர், இளைஞன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தப்பிச் சென்றதையும் தான் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆற்றில் குதித்த இளைஞன் நீந்தி கரைக்கு வந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸார் வந்து காணாமல் போன யுவதியை தேடி வருகின்றனர்.
காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த யுவதி நேற்று காலை பயிற்சி வகுப்பிற்கு செல்வதாக கூறி சென்றதாக யுவதியின் வீட்டார் தெரிவித்துள்ளனர்.



