எதிர்காலத்தில் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும்: எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைப்பினர்

#Corona Virus
Mayoorikka
3 years ago
எதிர்காலத்தில் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும்: எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைப்பினர்

ஒமிக்​ரோன் உள்ளிட்ட வைரஸ் பிறழ்வுகளின் பரவல் அதிகரித்துள்ளதால், நாடு எதிர்காலத்தில் நெருக்கடியை சந்திக்கக்கூடும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமையானது ஏதாவது அழுத்தங்களுக்கு அடி பணிந்தா என்பது தொடர்பிலும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.  

உபுல் ரோஹன மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய அவதான நிலையை நோக்கி செல்லக்கூடும். 

இந்த பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மேலும் தளர்த்துவது எவ்வளவு நியாயமானது மற்றும் நடைமுறையானது என்ற கடுமையான கேள்வி எழுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அதிகாரிகள் கொவிட்-19 தொற்றுநோய் குறித்த தரவுகளின் அடிப்படையில் இந்தத் தளர்வைச் செய்துள்ளனரா? அல்லது யாரினுடையதாவது அழுத்தங்கள் காரணமாகக் இவற்றை செய்கின்றனரா? என்ற பாரிய பிரச்சனை எங்களுக்கு உள்ளது. 

எவ்வாறாயினும், கொவிட் -19 தொற்றுநோய் எதிர்காலத்தில் நாட்டில் அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், பண்டிகைக் காலத்தை பொதுமக்கள் கொண்டாடிய பின்னர் அதிகளவில் நோயாளிகள் பதிவாக ஆரம்பிக்கின்றனர். இப்போதும் கூட, ஊடகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை விட அடிமட்ட அளவில் அதிக நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!