மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை

Prabha Praneetha
4 years ago
மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக மேல் மாகாணத்தினுள் விசேட கடமைகளுக்காக பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தை கட்டுப்படுத்த, சுகாராத வழிமுறைகளை நடைமுறைப்படுத்த, மோசடியில் ஈடுபடும் வியாபாரிகளின் செயற்பாடுகள் மற்றும் முடிச்சுமாறிகளின் (Pickpocket) நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடங்களின் அறிக்கைகளுக்கமைய, டிசம்பர் மாத கடைசி இரு வாரங்களும் நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகம் பதிவாகும் காலமாகும்.

இதன் காரணமாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!