வலிமை படத்தில் நடிகர் அஜித்குமார் பயன்படுத்திய பைக் யாருடையது ?

அஜித்தின் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை.
இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக பல இன்னல்களை சந்தித்து தற்போது வெளியாக காத்திருக்கிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் Glimpse வீடியோ மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் விஜய் டிவி புகழ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இதனிடையே தற்போது இப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் கார்த்திகேயா பயன்படுத்திய விலையுர்ந்த பைக்கின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.இப்பொது அந்த பைக் தயாரிப்பாளர் போனி கபூர் அலுவலகத்தில் தான் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Video of Ajih Sir and villain kartikeya’s bike used in valimai…at boney kapoor’s chennai office#Valimai #Ajithkumar pic.twitter.com/k8aHX6jEqD
— EMPEROR AJITH FANS™ (@EmperorAjithFC) December 13, 2021



