ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் நீதிமன்றில் அம்பலப்படுத்திய தகவல்

#Court Order
Prathees
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் நீதிமன்றில் அம்பலப்படுத்திய தகவல்

ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத்துறைக்கு முன்னர் கிடைத்த தகவலை அரச புலனாய்வு பிரிவின்  முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இராணுவத்திற்கு அறிவிக்கவில்லை என முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் சூல கொடித்துவக்கு நீதிமன்றில் இன்று  தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

போதிய புலனாய்வு தகவல் கிடைத்த போதிலும், ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏழாவது நாளாகவும் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது இராணுவ புலனாய்வு சபையின் பணிப்பாளராக இருந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சூல கொடித்துவக்கு சாட்சியமளித்தார்.

சஹாரான் ஹாஷிமின் தீவிரவாத நடவடிக்கைகள் பற்றி பல சமயங்களில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார்.

9 கடிதங்கள் மூலம் எழுத்து மூலம்  அறிவிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.