காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றம்

#India #people #Kashmir #evacuate
Prasu
6 hours ago
காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றம்

இந்தியா அதன் காஷ்மீர் வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை அவசரமாக வெளியேற்றி வருகின்றது.

இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினை முற்றிவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இருநாட்டு எல்லையில் உள்ள கிராமங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் முகாம்களில் உறங்கியதாக அதிகாரிகளும் குடியிருப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் காஷ்மீர் வட்டாரத்தில் 2,000க்கும் அதிகமான கிராமவாசிகள் அச்சத்தில் வீடுகளைவிட்டு வெளியேறினர். இந்தியாவின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் சுமார் 24 விமான நிலையங்கள் இன்னமும் மூடப்பட்டுள்ளன.

இந்தியாவின் எல்லைப் பகுதிகள் உச்ச விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு அது தயாராய் இருக்கவேண்டும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746775803.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!