பிரியந்த குமார கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவினர் கைது

#Pakistan
Prathees
1 year ago
பிரியந்த குமார கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவினர் கைது

பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் இலங்கையர் பிரியந்த குமார கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்  மேலும் ஒரு கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் 18 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் அவர்கள் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த கொடூர கொலை தொடர்பாக 52 முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சியால்கோட் பொலிசார் தெரிவித்தனர்.

பிரியந்த குமார அவர் பணியாற்றிய தொழிற்சாலையின் ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினரால் டிசம்பர் 3 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு