எரிவாயு வெடித்து இறந்த பெண்ணின் உறவினர்கள் வழக்கு தொடர தீர்மானம்

#Death
Prathees
2 years ago
எரிவாயு வெடித்து இறந்த பெண்ணின் உறவினர்கள் வழக்கு தொடர தீர்மானம்

எரிவாயு வெடித்ததில் காயமடைந்து, சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாயின் உறவினர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர்.

குண்டசாலை, நாட்டரன்பொத பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் உறவினர்கள் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வில்கமுவ, தேவகிரிய, பிதுருவெல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனது பிள்ளைகளின் கல்விக்காக குண்டசாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த போதே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளார். 

உயிரிழந்த பெண்ணின் கணவர் இது தொடர்பாக தெரிவிக்கையில், 

 எரிவாயு நிறுவனம் மற்றும் அரசு மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன். அதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டன.

நான் என் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக இந்த வழக்கை கூறவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகரமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்த மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.