இயக்குனர் சிவா வீடுசென்று சூப்பர் ஸ்டார் கொடுத்த பரிசு
                                                        #TamilCinema
                                                        #Actor
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        3 years ago
                                    
                                ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த, குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.
படம் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து நல்ல வசூலை தான் பெற்று வந்தது, ஆனால் இடையில் மழை வந்து படத்தின் வசூலுக்கு கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் ஒரு பேட்டியில் கூட நடிகை குஷ்பு அண்ணாத்த படு ஹிட்டான படம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் சிவா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். சந்தோஷமாக சிவாவுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளாராம்.
காலை 11 மணிக்கு சிவா அவர்களின் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் 2 மணி வரை அவரது வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
ரஜினியின் திடீர் வருகையை சிவாவின் குடும்பத்தார் மிகவும் ஆச்சரியமாக பார்த்துள்ளனராம்.