ஓமிக்ரான் தொடர்பாக ஐரோப்பிய சுகாதார நிபுணர்கள் அறிக்கையும் அதற்கு மாறுபாடான அறிக்கைகளும்..... (Video)
உலகளாவிய ரீதியில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றுகள் மற்றும் பாதிக்கு அடுத்த சில நாட்களில் புதிய ஓமிக்ரான் தொற்றாக மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார அமைப்பானது கொரோனா புதிய மாறுபாடு தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஓமிக்ரான் தொடர்பாக ஐரோப்பிய சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகையில், குறித்த தொற்றானது மிகுந்த பாதிக்கு கொண்டது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவரை ஐரோப்பாவில் 13 நாடுகளிலும் பிரித்தானியாவிலும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் ஆபிரிக்க நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.
இது குறித்த தொற்றானது, ஐரோப்பாவில் உறுதி செய்யப்படும் கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேலானவர்களுக்கு அடையாளம் காணப்படலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஓமிக்ரான் தொற்றானது மிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பில் விரிவான ஆய்வு முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சில நிபுணர்களின் அறிக்கையில் இத்தொற்றால் இதுவரை எற்பட்ட பாதிப்புகளைவிட பெரிய பாதிப்புக்கள் ஏற்பட வாப்பு இல்லை எனவும் கூறுகிறனர்.