சுவிற்சர்லாந்தின் புதிய சட்டமுறைகளும்,, ஓமிக்றோன் வைரசும்,
கடந்த 30.11.2021 சுவிற்சர்லாந்தின் நடுவனரசு விரைந்த கலந்துரையாடலை மாநிலங்களின் நலவாழ்வு அமைச்சர்களுடனும், நலவாழ்வுத்துறைசார் சுகாதாரத்துறை செயலர்களுடனும் ஆழமாக நாடத்தியிருந்தது.
இக்கலந்தாய்வு 01.12.2021 புதன்கிழமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்
03.11.2021 முதல் சுவிற்சர்லாந்து புதியவகை மகுடநுண்ணியையும் எதிர்கொள்வதற்கான தமது அறிவிப்பனை வெளியிட உள்ளது.
இதன்படி வெள்ளி அறிவிக்கப்படும் நடவடிக்கைகள் திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவிஸ் அரசின் புதிய அறிவிப்பு நடைமுறைகள் பெரும்பாலும் 24.01.2022 வரை கடைப்பிடிக்க வேண்டி இருக்குமாம்.
டெல்ரா (Delta) மற்றும் ஓமிக்றோன் (Omikron) எனப்படும் வைரஸ்
இந்தியாவில் தோற்றம்பெற்ற டெல்ரா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தோற்றம் பெற்ற ஓமிக்றோன் வகை மகுடநுண்ணிகள் பரவலை தடுப்பதற்காகவே புதிய நடவடிக்கைகள் சுவிற்சர்லாந்து அரசினால் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளை சுவிஸ் அரசு 03. 12. 21 அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது:
ஆம்... நடைமுறைக்கு வரவிருக்கும் சட்ட ஒழுங்கு மாற்றங்கள் பின் வருமாறு அமுலாக்கப்படலாம்..
அவையாவன
- சுவிற்சர்லாந்தின் எல்லைகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டு, தடுப்பூசிசான்று சோதனை அதிகப்படுத்தப்படும்.
- உள்ளரங்குகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் விளையாட்டு நிகழ்வுகள் உட்பட தடுப்பூசிச்சான்று கட்டாயமாக்கப்படும்.
- 30 ஆட்கள்வரை சான்றிதழ் இல்லாமல் ஒன்றுகூடலாம் எனும் விலக்கு நீக்கப்படும்.
- 11 ஆட்களுக்குமேலாக ஓரிடத்தில் ஒன்றாக ஒன்றுகூடுவதானால் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் காட்ட வேண்டும்.
- வெளியரங்கில் 1000 மக்கள்வரை தடுப்பூசி சான்றுடன் ஒன்றுகூடலாம் என இப்போது இருக்கும் நடைமுறை நீக்கப்பட்டு ஆகக்கூடியது 300 ஆட்கள்மட்டுமே தடுப்பூசிசான்றுடன் கூடலாம் எனும் விதி நடைமுறைப்படுத்தப்படும்.
- பொதுப்போக்குவரத்து துறையிலும் மற்றும் பொது இடங்களில் உள்ளரங்குகளில் எப்போம் முகவுறை அணிய வேண்டும் எனும் கட்டாயம் அறிவிக்கப்படும்.
- பண்பாட்டு மற்றும் விளையாட்டு துறை நிகழ்வுகளில் முகவுறை அணியக்கூடிய வாய்புக்குறைந்தால் அவர்கள் வருகை அளிப்போரது தகவலை நிரலில் பதிவுசெய்யும் நடைமுறை அறிவிக்கப்படும்.
- தொழில் இடங்களிலும் அனைத்து தொழிலாளர்களும் முகவுறை அணியப் பணிக்கப்படுவர்
- வீடுகளில் இருந்து வேலை செய்ய வாய்புள்ளோர் வீடுகளில் இருந்தபடி பணியாற்ற வேண்டப்படுவர்
- பாடசாலையில் தொடர் மகுடநுண்ணித்தொற்றுச் சோதனைகள் மாணவர்களுக்கு நடாத்தப்படும்
- தொடர்வினைப்பரிசோதனை (பி.சீ.ஆர்) சான்று தற்போது 72 மணிநேரத்திற்கு செல்லும் என உள்ளது இதன் செல்லுபடியாகும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும்.