எரிபொருள் தட்டுப்பாடு! பதவி விலகுவாரா அமைச்சர்
#SriLanka
#PrimeMinister
Mayoorikka
4 years ago
நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்போது அதனை வேடிக்கை பார்த்துகொண்டிருக்காது, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.