நயன்தாரா வாங்கியுள்ள புதிய வீடு – இத்தனை கோடியா
Prabha Praneetha
3 years ago

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
மேலும் தனது படங்களை முடித்த பின் நயன்தாரா தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
நயன்தாரா தற்போது எழும்பூரில் உள்ள பிளாட்டில் வசித்து வருகிறார், தற்போது அதை விட சிறந்த வீட்டில் வசிக்க வீடு தேடியதாக கூறப்படுகிறது.
பின்னர் போயஸ் கார்டனில் எழும்பி வரும் பிரமாண்ட அபார்ட்மென்டில் இரண்டு பிளாட்-யை புக் செய்துள்ளார் நயன்தாரா. இரண்டுமே நான்கு படுக்கையறைகள் கொண்டது.
இந்நிலையில் அந்த ஒரு Apartment-ன் விலை ரூ.18 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு ஆடம்பரமான வீட்டில் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வசிக்கவுள்ளனர்.



