நவாசனம் செய்வது எப்படி? லங்கா4.கொம் / Lanka4.com

Prasu
2 years ago
நவாசனம் செய்வது எப்படி? லங்கா4.கொம் / Lanka4.com

ஒரு நாற்காலியில் அமரவும், நாற்காலியில், சற்று  முன் அமர்ந்து இரு கால்களையும் மெதுவாக படத்தில் உள்ளது போல் நீட்டவும். இரு கைகளினால் கால் முட்டு பக்கத்தில் பிடித்துக்கொள்ளவும். பத்து வினாடிகள் முதல் இருபது வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக காலை தரைக்கு கொண்டு வரவும். இதே போல் மூன்று தடவைகள் பயிற்சி செய்யவும். காலை, மாலை சாப்பிடும் முன் இரண்டு முறைகள் பயிலவும்.

பலன்கள்

  • அடிவயிற்றுக்கான சிறந்த யோகா பயிற்சியாகும் இது. வயிறில் உள்ள அனைத்து பகுதிகளும் அழுத்தம் பெறுவதால் வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும்.
  • கணையங்களின் செயற்பாட்டை தூண்டுவதால் நீரிழிவு நோயைத் தடுக்கிறது.
  • குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த யோகாசனப்பயிற்சி உதவுகிறது.
  • இதை தினமும் தொடர்ந்து செய்வதால் இரைப்பை, குடல் போன்ற செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. மேலும் வயிறு வீக்கம், வாய்வு தொந்தரவை போக்குகிறது.
  • மலச்சிக்கலுக்கான இயற்கை வைத்தியமாக செயல்படுகிறது.
  • அல்சர் நோயை குணப்படுத்துகிறது.
  • கர்ப்பிணிகள் செய்யும் போது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும்.