லண்டனில் பயங்கர தீவிபத்து: ஈழத் தமிழ்க் குடும்பத்தில் இரு குழந்தைகள் உட்பட நால்வர் உடல்கருகி பலி (போட்டோ / வீடியோ)
தென்கிழக்கு லண்டன் (Bexleyheath) பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.வியாழக்கிழமை இரவு பெக்ஸ்லிஹீத்தில் உள்ள ஹாமில்டன் சாலையில் உள்ள வீட்டில் இந்த பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது.
இச் சம்பவம் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், 8.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு பெக்ஸ்லி, எரித், பிளம்ஸ்டெட், லீ கிரீன் மற்றும் சிட்கப் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
சுவாசக் கருவியுடன் சென்ற தீயணைப்பு வீரர்கள் 30 அடி ஏணியைப் பயன்படுத்தி முதல் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டனர்,
ஆனால் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீக்காயங்களுடன் கட்டிடத்தை விட்டு வெளியேறியா ஒருவர், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
லண்டன் தீயணைப்பு ஆணையர் ஆண்டி ரோ, இந்த தீ விபத்து உண்மையிலேயே பயங்கரமான சம்பவம்,இது வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது என்று கூறினார்.இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவந்தது என்னவெனில்,
அப்பா வீட்டில் நெருப்பு எரியுது என்று கதறியுள்ளார் மனைவி. வேலையில் இருந்த கணவரோடு பேசும் போதே போன் கட் ஆகி விட்டது. கணவர் மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. உடனே அவர் வேலையில் இருந்து புறப்பட்டு ஓடி வந்தார். ஆனால் அங்கே மனைவி, 2 பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் என 4 பேர் தீயில் இறந்து விட்டார்கள்.
லண்டனை அடுத்து பெக்ஸ்லி- ஹீத் என்னும் இடத்தில் இந்த பெரும் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கீழ் வீட்டில் தீ ஏற்பட்டதால், மேலே இந்த 2 பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கிக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் தான் வீட்டை திருத்தியும் உள்ளார்கள்… 6 தீ அணைக்கும் வாகனம் மற்றும் ..40 தீ அணைக்கும் படையினர் போராடியும் உயிர்களை காப்பாற்ற முடியவில்லை.
இறந்த 2 பெண்களின் வயது தெரியவில்லை. ஆனால் 2 குழந்தையில் ஒன்று கை குழந்தை என்றும் மற்றது 5 அல்லது 6 வயது மதிக்கத் தக்க குழந்தை நேற்று(வியாழன்) இரவு 8.30 மணிக்கு திடீரென அவர்களது வீடு தீ பற்றிக் கொண்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தீயினால் ஏற்பட்ட புகையை அதிகம் சுவாசித்ததன் காரணமாகவே அவர்கள் 4 பேரும் இறந்திருக்க கூடும் என்று, பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)