பைடனால் புறக்கணிக்கப்படும் கமலா ஹாரிஸ்?
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் புறக்கணிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், கமலா ஹாரிஸின் பிரச்சாரம், அமெரிக்க பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம், ஜோ பைடனின் வெற்றிக்கு அவர் உறுதுணையாக இருந்தார்.
இந்நிலையில்,அமெரிக்க எல்லை பிரச்சனை தொடர்பான விவகாரத்தில், கமலா ஹாரிஸ்ஸின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை எனவும் இதனால் புதிய துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க, பைடன் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்ஸை விட அந்நாட்டு போக்குவரத்து அமைச்சராக உள்ள பீட் பட்டிகெக்கிற்கு, ஜோ பைடன் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம், என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனாதிபதி - துணை ஜனாதிபதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.