நாய் என நினைத்து வளர்த்து வந்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பெரு நாட்டில் ஒருவர் பல ஆண்டுகளாக நாய் என நினைத்து நரியை வளர்த்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டில் மரிபெல் சோடெலோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், அவரது மனைவிக்கும் பல ஆண்டுகளாக சொந்தமாக நாய் வாங்கி வளர்க்க வேண்டும் என்று ஆசைபட்டுள்ளார்.
அந்த வகையில் மரிபெல் ஒரு நாயை வாங்க சிறிய கடைக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு பிடித்த அழகான நாய்க்குட்டியை 13 டாலர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். அப்போது அந்த கடைக்காரர் இந்த நாய் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்தது என்று கூறி விற்பனை செய்ததார்.
அந்த தம்பதி ஆசையாக வாங்கிய முதல் நாய்குட்டிக்கு ரன் ரன் என்று அவர் பெயர் வைத்துள்ளார். ஆனால் நாளடைவில் நாய்க்குட்டி அருகிலுள்ள கோழிகள் மற்றும் வாத்துகளைக் கொன்று சாப்பிடத் தொடங்கியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் நாய் தோற்றம் மாறி அதன் காதுகள் நரிகளின் காதுகளை போல் மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்த நாய் சாலையில் திரியும் 3 பன்றிகளை கொன்று சாப்பிட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு பிறகு தான் அந்த தம்பதிக்கு தங்கள் வளர்த்து வந்தது நாயல்ல.. நரி என்று தெரிய வந்தது. இறுதியில் உண்மை தெரியவர அதிர்ச்சி அடைந்த தம்பதி கால்நடை மருத்துவமனையில் வளர்த்து வந்த நரியை ஒப்படைத்துள்ளனர்.