உலகின் விலை உயர்ந்த மீன் இதுதான்.. கோடிக்கணக்கில் விற்கப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா..?
அட்லாண்டிக் புளூஃபின் டுனா மீன் ( Atlantic Bluefin Tuna Fish) தான் உலகிலேயே விலை உயர்ந்த மீனாக கருதப்படுகிறது.. சந்தையில் இந்த மீன் பல லட்சம் வரை விற்கப்படுகிறது.. ஆனால் இங்கிலாந்தில் அழிவின் விளிம்பை எட்டிய இந்த மீனை பிடிக்க தடை உள்ளது. எனினும் மற்ற நாடுகளில் உள்ள மீனவர்கள் ஒரு முறையாவது இந்த மீனை பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
இந்த மீன் உலகெங்கிலும் உள்ள மீன் பிரியர்களின் முதல் தேர்வாக கருதப்படுகிறது. அதே போல் உலகம் முழுவதும் உள்ள உணவக உரிமையாளர்கள் அதை தங்கள் மெனுவில் சேர்க்க விரும்புகிறார்கள்.. ஆனால் அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது என்பதே சிக்கல்..
சமீபத்தில் 218 கிலோ அட்லாண்டிக் புளூஃபின் டுனா ஏலம் விடப்பட்டது என்பதிலிருந்து அதன் விலையை தெரிந்து கொள்ளலாம்.. அப்போது அந்த மீன் 2.5 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டது.. அதாவது இந்திய ரூபாயில் 25,86,05,135.25 கோடி.
சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த மீனின் எடை 250 கிலோ வரை இருக்கும். இந்த மீனின் அளவு டுனா இனங்களில் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. இது மிக வேகமாக நீந்தக்கூடியது.. இந்த மீன்கள் அழிந்து வரும் உயிரினங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இந்த மீனை பிடிப்பது குற்றமாக கருதப்படுவதற்கு இதுவே காரணம். மீனவர்களுக்கு இந்த மீன் தவறுதலாக கிடைத்தால் கூட உடனடியாக மீண்டும் கடலில் விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.