கோவிட் மாத்திரைகளை பிற நிறுவனங்களும் தயாரிக்க பைசர் ஒப்புதல்

Prasu
4 years ago
கோவிட் மாத்திரைகளை பிற நிறுவனங்களும் தயாரிக்க பைசர் ஒப்புதல்

அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர்,  தங்கள் நிறுவனத்தின் கோவிட் மாத்திரைகளை பிற நிறுவனங்களும் தயாரித்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. பைசர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மூலம் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பைசர் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-  “ஜெனீவாவை மையமாக கொண்டு கூட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு  கோவிட் மாத்திரைகளை தயாரிக்கும் உரிமம் வழங்கப்படும். இதன் 95 -நாடுகள் பயன்பெறும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை 90 சதவீதம் தங்கள் நிறுவனத்தின் மாத்திரைகள் தடுப்பதாக பைசர் நிறுவனம் இந்த மாத துவக்கத்தில் தெரிவித்தது இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!