தாய்வானை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் – அவுஸ்ரேலியா
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
தாய்வானை பாதுகாப்பதற்குத் தேவை ஏற்படின் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
தாய்வான் மீதாது சீனா தமது பலத்தைப் பயன்படுத்துமாயின் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் என அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாய்வானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமது பலத்தைப் பயன்படுத்துவதைச் சீனா இதுவரையில் நிராகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சீனா போர் ஏற்படக்கூடும் என்ற கருத்தை மறுத்து வரும் நிலையில் குறித்த விடயத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும் என அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.