குளத்தில் மூழ்கிய கார்- 4 இந்தியர்கள் பலி

#Death
Prasu
4 years ago
குளத்தில் மூழ்கிய கார்- 4 இந்தியர்கள் பலி

நேபாளத்தின் ரவுதகத் மாவட்டம் இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கவுர்-சந்திராபூர் சாலையில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த ஒரு கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த 4 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

இறந்தவர்கள் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினாநாத் (25), அருண் (30), திலிப் (28),  அமித் (27) என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் இந்தியர்கள் இறந்தது குறித்து ரவுதகத் காவல்துறை இந்திய காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தது. 

அதன்பின்னர் இறந்தவர்களின் உறவினர்கள் இன்று காலையில் வந்து உடல்களை அடையாளம் காட்டினர். குளத்தில் விழுந்த கார் கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!