அரசுக்கு எதிராக சஜித் அணி மாபெரும் போராட்டம்!
#Sajith Premadasa
Prasu
4 years ago
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், அரசுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குருநாகல், கல்கமுவ பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலர் பங்கேற்றனர்.
பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்ட போராட்டக்காரர்கள், உடன் நிவாரணம் வழங்குமாறும் வலியுறுத்தினர்.

அத்துடன், விவசாய நடவடிக்கைக்குத் தேவையான உரத்தை வழங்குமாறும் போராட்டத்தில் பங்கேற்றிருந்த விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
