சிறைக்குள் கடத்த முற்பட்ட கைப்பேசிகள் அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க கொண்டு செல்லப்பட்ட மூன்று கைத்தொலைபேசிள் சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் இன்று (03) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டார்.அவருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரித்த நீதவான், சந்தேகநபருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபர் களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அணிந்திருந்த காலணிகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
களுத்துறை சிறைச்சாலையில் செயற்படும் சிசிரீவி கட்டமைப்பு மற்றும் ஆயுதப் பிரிவு அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பு காரணமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் ஒரு ஜோடி பாதணிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.



