இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?
#Indonesia
#SriLanka
#Earthquake
Prasu
3 years ago

இந்தோனேஷியா − சுமத்ரா தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று சற்று முன்னர் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
எனினும், இந்த நிலநடுக்கத்தினால் இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும், இது குறித்த மேலதிக தகவல் கிடைக்கும் பட்சத்தில் அறிவிக்கப்படும் எனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்



