தடுப்பூசி அட்டை கட்டாயம்! வெளியான முக்கிய அறிவித்தல்
Reha
3 years ago

சுற்றுலாத்தளங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி அட்டைகளை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமான சுற்றுல மையங்களுக்கு செல்லும் போது பூரணமாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க (Dhammika Wijesinghe) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுற்றுலா மையங்களில் தடுப்பூசி அட்டைகளை பரிசோதனையிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களும் சுற்றுலா தளங்களில் ஒன்றுகூட முடியும் என சுகாதார அமைச்சும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



