தீபாவளி பண்டிகை காலத்தில் யாழ். மக்கள் சுகாதார முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
#SriLanka
#Covid 19
Mugunthan Mugunthan
3 years ago

வடமாகாணத்தில் பண்டிகை காலத்தில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள தவறினால் பேராபத்து உருவாகும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனி வரும் நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சுகாதார முறைகளைப் பின்பற்றவேண்டும்.
கடந்த புது வரு டத்தின் போது ஏற்பட்ட கொத்தணி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இல்லையெனில் அது பேராபத்தை உண்டாக்கும் அபாயம் உள்ளதாகவும் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



