யாழில் அதிரடியாக 25 பேரைக் கைது செய்தது ஏன்?
#Jaffna
#Arrest
Prathees
3 years ago

சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ். நகரில் நேற்று (02) கைது செய்யப்பட்டனர்.
தற்பொழுது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் வீதி பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதன்போது யாழ்ப்பாண நகரின் முக்கிய வீதிகளில் முகக்கவசம் அணியாது நடமாடிய 25 பேர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



