அதிக எடையுடன் பிறந்த குழந்தை
Keerthi
4 years ago
பிரித்தானியாவில் செர்ரல் மிட்செல் (Cherral Mitchell) என்ற 31 வயதான பெண்ணொருவர் 6.7 கிலோகிராம் எடை கொண்ட ஆண் குழந்தையொன்றை கடந்த 31 ஆம் திகதி பிரசவித்துள்ளார்.
அல்பா (Alpha) எனப் பெயரிடப்பட்ட இக் குழந்தையானது பிரித்தானியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பிறந்த 3 ஆவது மிகப்பெரிய குழந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.'
மேலும் இக்குழந்தைக்கு ‘Baby Hippo’ , ‘Butter Bean’ , ‘pumpkin baby’ ஆகிய செல்லப்பெயர்களும் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இக் குழந்தையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.