விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல – தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு அறிவிப்பு!
                                    Prabha Praneetha
                                    
                            
                                        4 years ago
                                    
                                நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், அவர் உயிரிழப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
இதனால் அவருடைய மரணத்திற்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டமைதான் காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், கொரோனா தடுப்பூசிக்கும் விவேக்கின் மரணத்திற்கும் தொடர்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது.
அவர் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.