நயன்தாரா பட இயக்குனருடன் இணைந்த ராணா
Prabha Praneetha
3 years ago

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான படத்தின் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் ராணா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
பாகுபலி படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ராணா. இவர் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்குகிறார்.
ஸ்பிரிட் மீடியா நிறுவனம் விஷ்வசாந்தி பிக்சர்ஸ் மற்றும் வீடன்ஸ் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து வழங்குகிறது.
கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும் ராம்பாபு சோடிஷெட்டி இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது.



