ஏழு வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் மீரா!
Prabha Praneetha
3 years ago

நடிகை மீரா ஜாஸ்மின் ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



