30.09.2021 இன்றைய ராசி பலன்

#Astrology
Keerthi
2 years ago
30.09.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: வாழ்வில் முன்னேறுவதற்கான திட்டங்களை யோசிப்பீர்கள்.
பரணி: பேச்சினால் மற்றவர்களை கவருவீர்கள். மன திடம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: நினைத்த வேகத்தில் சிலவற்றை முடிக்க முடியாமல் தடை ஏற்படும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: நெருங்கிய நண்பர்களால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி: யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்வது நல்லதல்ல. கவனம் தேவை.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் தாமதமாக கிடைக்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: நண்பர் ஒருவர் மூலம் நல்ல செய்தி ஒன்று கிடைக்கும்.
திருவாதிரை: முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். பரபரப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் உற்சாகத்தை தரும்.

கடகம்:
புனர்பூசம் 4: தாயாருடன் வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
பூசம்: புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அலைச்சல் நன்மை தரும்.
ஆயில்யம்: போட்டியாளர்களைத் திறம்பட எதிர்கொண்டு வெல்வீர்கள்.

சிம்மம்: 
மகம்: புதிய முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு காலதாமதமாகக்கூடும்.
பூரம்: இளைஞர்கள் தங்கள் கடமைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
உத்திரம் 1: முயற்சியில் சிறு தாமதத்துக்குப் பிறகு வெற்றி உண்டு.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உற்ற நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்.
அஸ்தம்: மனதிற்கு நெருக்கமான ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
சித்திரை 1,2: அலைபேசி மூலம் வரும் செய்தி மகிழ்ச்சி தரும்.

துலாம்: 
சித்திரை 3,4: சமூக சேவையில் புதிய அனுபவம் உண்டாகும்.
சுவாதி: உணர்ச்சிவசப்பட்டு பிறருக்கு உதவப்போய் கைப்பொருளை இழக்க வேண்டாம்.
விசாகம் 1,2,3: ஆன்லைன் மூலமாக சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உங்களின் அந்தஸ்து உயரும். உறவினர்கள் தொடர்பு கொள்வர்.
அனுஷம்: வெளிநாட்டில் வசிப்பவர்கள் சிறு பயணமாகத் தாய்நாடு வருவர்.
கேட்டை: புதிய ரிஸ்க்குகள் எடுக்கும் முன் இருமுறை யோசியுங்கள்.

தனுசு: 
மூலம்: இளைஞர்களின் செயல்பாடுகளில் அதிக கவனம் தேவை.
பூராடம்: எதிலும் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பீர்கள்.
உத்திராடம் 1: உங்களது கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம் : 
உத்திராடம் 2,3,4: முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
திருவோணம்: உங்களது தனிப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அவிட்டம் 1,2: புதிய துறையில் ஈடுபாடும், ஆர்வமும் வரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பொருளாதார உதவிகள் சிறு தாமதத்துக்கு பிறகு கிடைக்கும்.
சதயம்: வங்கி தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: வெளிநாட்டுக் கல்வி, பணி தொடர்பான முயற்சி வெற்றி பெறும்.

மீனம்: 
பூரட்டாதி 4: நிதி சம்பந்தமான முந்தைய முயற்சி ஒன்று பலன் தரும்.
உத்திரட்டாதி: இளைய சகோதரர் வாழ்வில் முன்னேற்றம் உண்டு.
ரேவதி: உழைப்பு கூடும். குழந்தைகளின் வாழ்வில் நன்மை நிகழும்.