100 அடி பள்ளத்தில் விழுந்த லொறி: உயிரைக் காப்பாற்ற மூன்று மணிநேரப் போராட்டம்
#Accident
Prathees
3 years ago

பண்டாரவளையில் இருந்து பதுரலியவுக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியைவிட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எல்ல - வெள்ளவாய பிரதான வீதியில் உள்ள எல்ல தேவாலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறி பள்ளத்தில் கவிழ்ந்ததையடுத்து அதில் சிக்கிய சாரதியை மீட்க சுமார் மூன்று மணி நேரம் போராடியுள்ளனர்.
லொறி பள்ளத்தில் விழுந்து மரங்களில் சிக்கியதையடுத்து சம்பவ இடத்திலும்பொலிஸ் அதிகாரிகளும் பிரதேச மக்களும் இணைந்து லொறியின் ஒரு பகுதியை வெட்டியதால் சாரதி காப்பாற்றப்பட்டார்.



