நாயும் பூனையும் சேர்ந்து படைத்த கின்னஸ் சாதனை-ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்..! video

#world_news
Yuga
3 years ago
நாயும் பூனையும் சேர்ந்து படைத்த கின்னஸ் சாதனை-ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்..! video

நாய் மற்றும் பூனை இணைந்து விளையாட்டு ஸ்கூட்டரை ஓட்டும் வீடியோ, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. பூனையின் பெயர் சஷ்மி, பெங்கால் பூனையான சஷ்மிக்கு இப்போது 7வயதாகிறது.

மனிதர்களைப் போலவே விலங்குகளும் நம்ப முடியாத பல்வேறு சாதனைகளை நிகழ்த்துகின்றன. அந்த வீடியோக்களை பார்க்கும்போது, ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்லும். அந்தமாதிரியான வீடியோ ஒன்றை கின்னஸ் சாதனை பக்கம் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாயும், பூனையும் இணைந்து பல்வேறு சேட்டைகளை செய்கின்றன.

சுமார் 5 நிமிடம் இருக்கும் அந்த வீடியோவில், பூனையுடன் இணைந்து நாய் பொம்மை ஸ்கூட்டரை நீண்ட தூரத்துக்கு ஓட்டிச் செல்கிறது. பின்னர், ஸ்கூட்டர் மீது பூனை இருக்கும்போது, நாய் அதனை தள்ளிக்கொண்டு ஓடுகிறது. இது பார்ப்பவர்களுக்கு உண்மையா? என்று கூட தோன்றும். ஏனென்றால், நாயும், பூனையும் சேர்ந்திருப்பது என்பதே வியப்பின் உச்சம். அவை இரண்டும் இணைந்து ஒன்றாக ஸ்கூட்டர் ஓட்டுவது, மற்ற ஆக்டிவிட்டிகளை செய்வது என்றால், வியப்புக்கு சொல்லவா வேண்டும்.

பூனையின் பெயர் சஷ்மி, பெங்கால் பூனையான சஷ்மிக்கு இப்போது 7வயதாகிறது. பாஸ்டன் டெரியர் வகையைச் சேர்ந்த நாய் லாலி பாப்புக்கு 5 வயதாகிறது.

ஸ்கூட்டர் ஓட்டும் நாய், பூனை இவை இரண்டும் சிறந்த நண்பர்களாக இருக்கின்றன. மெலிசா மில்லெட் என்பவர், லாலிப்பாப் மற்றும் சஷ்மியை வளர்த்து வருகிறார். இது குறித்து அவர் பேசும்போது, லாலி பாப்பும், சஷ்மியையும் நான் நீண்ட நாட்களாக வளர்த்து வருகிறேன், அவை நண்பர்களாக மாறுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை. அவர்களுக்கு இடையிலான கெமிஸ்டிரி அந்தளவுக்கு ஒத்துப்போகிறது.

இருவரும் ஒன்றாக இணைந்து விளையாடுவதை பார்க்கும்போது மிகவும் ஆசையாக இருக்கும். எப்போது விளையாடினாலும், இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள் என்றும் மெலிசா மில்லெட் தெரிவித்தார். அவைகள் இரண்டுக்கும் இடையில் இருக்கும் அன்பைப் பார்த்தவுடன், ஸ்கூட்டர் ஒட்டவும், மற்ற விளையாட்டுகளில் சேர்ந்து விளையாடும் பயிற்சிகளைக் கொடுத்தேன்.

நான் எதிர்பார்த்தது போலவே இருவரும் அவ்வப்போது ஒன்றாக இணைந்து ஸ்கூட்டரில் சவாரி செல்வார்கள். நேரடியாக பார்த்த எனக்கு இது வியப்பாக தோன்றியதால் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டேன். கின்னஸ் குழுவினரும் அந்த வீடியோவைப் பார்த்து, அங்கீகரித்து சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என மெலிசா மில்லெட் தெரிவித்தார்.

இந்த வீடியோ இதுவரை சுமார் 21 ஆயிரத்துக்கும் மேலான பார்வைகளையும், லைக்குகளையும் கடந்துள்ளது. கண்களை கவரும் நாய் மற்றும் பூனையின் சேட்டைக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், உலக விந்தையில் இதுவும் ஒன்று எனக் கூறியுள்ளனர். இந்த வீடியோக்களைப் பார்க்கும்போது, ஒவ்வொரு விலங்கு மற்றும் மனிதர்கள் மீது நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கற்பிதங்கள் பொய் என நிரூபிக்கிறது எனவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!