வரலாற்றில் இன்று செப்டம்பர் 19…!!

#today #history
Yuga
2 years ago
வரலாற்றில் இன்று செப்டம்பர் 19…!!

இன்றைய தின நிகழ்வுகள்
634 – ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில் தமாசுக்கசு நகரை பைசாந்தியரிடம் இருந்து கைப்பற்றினர்.

1356 – இங்கிலாந்து எட்வர்ட் தலைமையில் “போய்ட்டியேர்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்று, இரண்டாம் யோன் மன்னரைக் கைது செய்தது.

1658 – யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.[1]

1676 – வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது.

1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சரட்டோகா சண்டைகள்: பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையினரை பெரும் சேதங்களுடன் வென்றன.

1778 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1799 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பேர்கன் போரில் பிரெஞ்சு-இடச்சுப் படைகள் உருசிய, பிரித்தானியப் படைகளை வென்றன.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் மிசிசிப்பியில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினரத் தோற்கடித்தனர்.

1868 – எசுப்பானியாவில் “புகழ் வாய்ந்த” புரட்சி ஆரம்பமானது. புரட்சியின் முடிவில் இரண்டாம் இசபெல்லா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1870 – பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிசு நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் நான்கு மாதத்தின் பின் புருசியாவிடம் வீழ்ந்தது.

1881 – சூலை 2-இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.

1893 – உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1916 – முதலாம் உலகப் போர்: கிழக்கு ஆப்பிரிக்க நடவடிக்கையில், பெல்ஜிய கொங்கோவின் குடியேற்றப் படைகள் டபோரா நகரைப் பெரும் சண்டையின் பின் கைப்பற்றின.

1939 – இரண்டாம் உலகப் போர்: கேப்பா ஒக்சீவ்சுக்கா சமரில் போலந்து போரில் ஈடுபட்ட தனது 75% படையினரை இழந்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஊர்ட்கென் காடு சண்டை ஆரம்பமானது.

1944 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

1952 – ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட சார்லி சாப்ளின் நாடு திரும்புவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.

1957 – ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

1970 – கிரேக்க சர்வாதிகாரி ஜியார்ஜியசு பப்படபவுலசின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரேக்க மாணவர் ஒருவர் தீக்குளித்து மாண்டார்.

1976 – தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் அனைத்து 154 பேரும் கொல்லப்பட்டனர்.

1978 – சொலமன் தீவுகள் ஐநாவில் இணைந்தது.

1983 – செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1985 – மெக்சிகோ நகரில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் உயிரிழந்தனர்.

1989 – நைஜரில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததில் அனைத்து 171 பேரும் கொல்லப்பட்டனர்.

1991 – ஏட்சி பனிமனிதன் இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.

1997 – அல்ஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.

2006 – தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

2014 – இலங்கையின் வடக்கே வேலணையில் நான்கு இடங்களில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன

2017 – மெக்சிக்கோவில் நடுப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 370 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1749 – சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1822)
1759 – வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (இ. 1850)

1886 – பாசல் அலி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (இ. 1959)

1911 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1993)

1921 – பாவ்லோ பிரையர், பிரேசில் மெய்யியலாளர் (இ. 1997)

1925 – எம். பி. ஸ்ரீனிவாசன், தென்னிந்திய இசை அமைப்பாளர் (இ. 1988)

1937 – சரோஜா வைத்தியநாதன், பரதநாட்டியக் கலைஞர்

1965 – சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீராங்கனை

1976 – இஷா கோப்பிகர், இந்தியத் திரைப்பட நடிகை

1980 – மேக்னா நாயுடு, இந்தியத் திரைப்பட நடிகை

1984 – காவ்யா மாதவன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்

656 – முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை)
1710 – ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (பி. 1644)

1881 – சேம்சு கார்ஃபீல்டு, அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (பி. 1831)

1935 – கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (பி. 1857)

1936 – விஷ்ணு நாராயண் பாத்கண்டே, இந்திய இசைக்கலைஞர் (பி. 1860)

1980 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசை, நாடகக் கலைஞர் (பி. 1908)

2014 – உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)

2019 – பொன். பூலோகசிங்கம், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர், வரலாற்றாளர் (பி. 1936)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள், (செயிண்ட் கிட்சும் நெவிசும், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1983)