பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் 8 குதிரைகள் உயிரிழப்பு_பல லட்சம் நஷ்ட ஈடு கோரிக்கை !!

Prabha Praneetha
2 years ago
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் 8 குதிரைகள் உயிரிழப்பு_பல லட்சம் நஷ்ட ஈடு கோரிக்கை !!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட குதிரைகளில் 8 குதிரைகள் வெப்ப காரணங்களால் உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது.

இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் ஸ்டுடியோவில் நடந்த போது படத்துக்காக பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று இறந்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது 8 குதிரைகள் இறந்ததாக சொல்லப்படுகிறது. குதிரைக்கு சொந்தக்காரர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் பல லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.