மாணவர் அரசியலிலிருந்து ஜனாதிபதி அரியணை வரை – அநுர குமார திசாநாயக்கவின் அரசியல் வரலாறு!

#SriLanka #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Politician #historic #Politics #L4
Prasu
21 minutes ago
மாணவர் அரசியலிலிருந்து ஜனாதிபதி அரியணை வரை – அநுர குமார திசாநாயக்கவின் அரசியல் வரலாறு!
இலங்கையின் சமகால அரசியலில் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர் அநுர குமார திசாநாயக்க அவர்கள்.

மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகிய அரசியல் அமைப்புகளின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்த இவர், 2024 செப்டம்பர் 21ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.

1997ம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிலும் இடம்பிடித்தார்.

images/content-image/1795460607.jpg

1998ம் ஆண்டு கட்சியின் அரசியல் குழுவிலும் உறுப்பினரானார். 1999ம் ஆண்டு மத்திய மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

2000ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஊடாக முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

2004ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மக்கள் விடுதலை முன்னணி இணைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

அதே ஆண்டு அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சராகப் பதவியேற்றார்.

images/content-image/1795460641.jpg

எனினும், மக்கள் விடுதலை முன்னணி 2005ம் ஆண்டு அரசாங்கக் கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவரது அமைச்சுப் பதவியும் முடிவுக்கு வந்தது.

பின்னர், 2008ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

2010ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசியப் பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

2014 பெப்ரவரி 2ம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவராக அனுர குமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டார்.

images/content-image/1795460653.jpg

2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

2015 முதல் 2018 டிசம்பர் வரையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பொறுப்பையும் வகித்தார்.

2022ம் ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவை நாட்டில் பெரும் மக்கள் எதிர்ப்பை ஏற்படுத்தின.

images/content-image/1795460668.jpg

இந்தச் சூழலில் அனுர குமார திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியும் அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் பொறுப்புக்கூறல் தொடர்பாகத் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

அதனை தொடர்ந்து, 2024 செப்டம்பர் 21ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுர குமார திசாநாயக்க போட்டியிட்டார்.

குறித்த தேர்தலில் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க போன்ற முன்னணி வேற்பாளர்களை 57,40,179 வாக்குகள் மூலம் வீழ்த்தி 2024 செப்டம்பர் 22ம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அவரை இலங்கையின் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

images/content-image/1795460739.jpg

செப்டம்பர் 23ம் திகதி அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இதன் மூலம் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார்.

மாணவர் அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்த அனுர குமார திசாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக வளர்ந்து, பின்னர் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தேசிய அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!