நேபாளத்திற்கு 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் தொகுப்பை அறிவித்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் பலேந்திர ஷாவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல முக்கிய முடிவுகள்எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இதன் போது நேபாளத்திற்காக 24,000 கோடி நேபாள ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் தொகுப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இரு தலைவர்களும் காணொளி வாயிலாக, நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.
மேலும், உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கும் நேபாளத்தின் ஜனக்பூர் தாமிற்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணிகள் ரயில் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா, இருநாடுகளுக்கு இடையிலான உறவுக்குப் புதிய உத்வேகம் அளிக்கும் நோக்கில், இரண்டு நாள் பயணமாக புது தில்லி வந்தடைந்தார்.
முன்னதாக, இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையே நீண்டகாலமாக நிலவும் எல்லைப் பிரச்சினை குறித்து, சீனா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் தலையீட்டை அவர் கோரியிருந்த கருத்துகளால், இருதரப்பு உறவுகளில் மே மாதம் சற்று சுணக்கம் ஏற்பட்டிருந்தது.
"இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான உறவு, இமயமலையைப் போல உறுதியானதாகவும், பெருங்கடல்களைப் போல விரிவானதாகவும் உள்ளது" என்று நேபாளத் தலைவர் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.