மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு இடையூறு: 8 இளைஞர்களை விடுவிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!

#SriLanka #Police #Kilinochchi #Investigation #people #LANKA4
Mithra
38 minutes ago
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு இடையூறு: 8 இளைஞர்களை விடுவிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!

கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்யவும்; நினைவேந்தல் பதாகையை மீண்டும் நிறுவ அனுமதிக்கவும் கோரிக்கை – தவறினால் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என எச்சரிக்கை.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் வழமையாக நிறுவப்பட்டு வந்த மாவீரர் நாள் நினைவேந்தல் வீதி வளைவு பதாகையை கிளிநொச்சி பொலிஸார் அகற்றியுள்ளதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு தமிழ் தேசிய மக்கள் இயக்கம் தனது கடுமையான கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. மாவீரர் நாள் என்பது ஈழத் தமிழ் மக்களின் வரலாறு, உணர்வுகள் மற்றும் கூட்டு நினைவுகளுடன் தொடர்புடைய முக்கியமான நினைவேந்தல் நாளாகும்.

 இந்நாளை அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என அந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட எட்டு இளைஞர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கிளிநொச்சி டிப்போ சந்தியில் அகற்றப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் வீதி வளைவு பதாகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.

அத்துடன், அகற்றப்பட்ட பதாகையை மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என்றும், அமைதியான நினைவேந்தல் உரிமையைப் பாதிக்கும் வகையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் சார்பில் இலங்கை அரசியலமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (Fundamental Rights – FR) வழக்குத் தாக்கல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசிய மக்கள் இயக்கம் எச்சரித்துள்ளது.

“நினைவேந்தல் உரிமை மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விடயமாகும்.

அதை அச்சுறுத்தலினாலோ அடக்குமுறையினாலோ முடக்க முடியாது” எனவும் அந்த இயக்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்வதுடன், மாவீரர் நாள் நினைவேந்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுவதற்கான சூழலை பொலிஸார் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!