சிறுவர் பாதுகாப்பு 365 நாட்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! – சஜித்

#SriLanka #Sajith Premadasa #International #LANKA4
Abi
3 hours ago
சிறுவர் பாதுகாப்பு 365 நாட்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! – சஜித்

சிறுவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது ஒரு நாள் கடமையல்ல, வருடத்தின் 365 நாட்களும் அனைவரினதும் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று (20) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கடந்த எட்டு தசாப்தங்களாக யுனிசெப் நிறுவனம் ஆற்றிவரும் பணிகளையும் அவர் பாராட்டினார்.

மேலும், 1,200 சிறுவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஐந்து அம்சத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள முன்மொழிவுகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

நியாயமான மற்றும் வெளிப்படையான அரச நிர்வாகம், பசுமையான தாய்நாடு, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கல்வித்துறை, போதைப்பொருள், மது மற்றும் புகைப்பழக்கம் அற்ற நாடு, வலுவான பொருளாதாரம் ஆகிய ஐந்து அம்சங்களும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய இலக்குகள் எனவும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு ஆண்டு முழுவதும் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!