கிளிநொச்சியில் 18 வயது யுவதி மாயம் – தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை!
#SriLanka
#Kilinochchi
#Women
#LANKA4
#Public
#Missing
Mithra
42 minutes ago
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சுமன் ஆகாஷியா என்ற யுவதி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கராயன்குளம், பாடசாலை வீதியில் வசித்து வந்த குறித்த யுவதியைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக அக்கராயன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதியைக் கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தாமதமின்றி பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், காணாமல் போன யுவதியை விரைவாகக் கண்டறிய பொதுமக்கள் இந்தத் தகவலைப் பரவலாகப் பகிர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.