ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸின் புதிய கிரிக்கெட் பணிப்பாளராக மஹேல ஜயவர்தன நியமனம்!

#SriLanka #Director #Mahela Jayawardene #LANKA4 #Cricket #sports
Abi
55 minutes ago
ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸின் புதிய கிரிக்கெட் பணிப்பாளராக மஹேல ஜயவர்தன நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் புதிய கிரிக்கெட் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL), மகளிர் பிரீமியர் லீக் (WPL), ஐக்கிய அரபு இராச்சியத்தின் ILT20, அமெரிக்காவின் MLC மற்றும் இங்கிலாந்தின் The Hundred உள்ளிட்ட தொடர்களில் ஜிஎம்ஆர் நிறுவனத்தின் உரிமையிலுள்ள அணிகளின் கிரிக்கெட் செயற்பாடுகளை அவர் மேற்பார்வையிடவுள்ளார்.

குறிப்பாக, டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் நிர்வாகப் பொறுப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் ஆகியவற்றுக்கு இடையில் மாற்றப்படுகின்றன.

இதற்கமைய, இம்முறை ஆடவர் அணியின் நிர்வாகப் பொறுப்பை ஜே.எஸ்.டபிள்யூ குழுமமும், மகளிர் அணியின் நிர்வாகப் பொறுப்பை ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் ஏற்கவுள்ளன. 

இதனால், டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியின் கிரிக்கெட் செயற்பாடுகளையும் மஹேல மேற்பார்வையிடவுள்ளார்.

இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய அவர், 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், மஹேலவின் முதல் பணியாக நாளை (21) ஆரம்பமாகவுள்ள ILT20 தொடரில் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியின் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவது அமையவுள்ளது. 

இவ்வணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பொறுப்பையும் மஹேல ஏற்கவுள்ளார்.

இதுவரை நடைபெற்ற நான்கு WPL பருவங்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, இதுவரை சம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!